Tuesday, January 13, 2015

'மாற்றம் ஒன்றே மாறாதது' என்ற கொள்கையின் அடிப்படையில் வருடா வருடம் புதிய குழுவை உருவாக்கி தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும் 'ரோட்டரி' என்ற மாபெரும் இயக்கத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து 'ரோட்டரி' உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லி எனது 'ரோட்டரி' அனுபவத்தை எங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிழைகிறேன்.

'ரோட்டரி' என்ற பேரியக்கத்தின் மாவட்டம் 3230-வின் இணையற்ற மாவட்ட ஆளுனர் நாசர் அவர்களின் தலைமையின் கீழ் இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்ததோடு, எங்கள் மாற்றத்தின் தலைவர் கண்ணா அவர்களின் மேற்பார்வையில் இந்த வருடம் 'கின்னஸ்' சாதனை நிகழ்த்தப்பட்டது.

பொங்கல் விழா தலைவர் சதிஷ்குமார் அவர்களின் தலைமையில் எல்லோரும் வியக்கும் வண்ணம் பொங்கல் விழாவை சிறப்புற நடத்தி மேலும் ஒரு மகுடத்தை நமது மாவட்ட ஆளுநருக்கு தந்துள்ளார். நமது பொங்கல் விழா தலைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்..

நான் என்னுள் இருக்கும் சில கேள்விகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவே எனது இனிய நண்பர் சதாசிவம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இதனை எழுதுகிறேன்.   என்னை பொறுத்தவரை 'ரோட்டரி உங்கள்ளுக்கு என்ன செய்தது? என்பதை விட நீங்கள் ரோட்டரிக்கு என்ன செய்தீர்கள்? என்ற வினாவை உங்களுக்குள் கேட்டு பாருங்கள்.

ஒவ்வொரு மனிதனும் தானும் தன்னை சுற்றியுள்ள குடும்பத்தார் மற்றும் உறவினர்களை தவிர சமுதாயத்துடன் ஒரு இணைப்பு பாலமாக இருக்கும் ரோட்டரியை புரிந்துகொண்டவர்கள் என்றென்றும் ரோட்டரிக்காக உழைக்கத் தயாராக இருப்பார்கள்.

எனக்குள்ளும் சமுதாயம் சார்ந்த நல்ல எண்ணங்கள் அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்தது ரோட்டரிதான்.  அதற்காக நான் 'ரோட்டரி'-க்கு நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.  நான் 2009-ஆம் ஆண்டு சென்னை காஸ்மோஸ் 'ரோட்டரி' சங்கத்தில் உறுபினராக சேர்ந்தபோது அதிகம் ஈடுபாடு இல்லாமல் இருந்தேன்.  எங்கள் சங்க உறுப்பினர் Rtn.சம்பத் அவர்கள் என்னை ரோட்டரிக்கு அறிமுகம் செத்தார். எனது சங்க உறுப்பினர், எங்கள் சங்கத்தின் அண்ணா Rtn.ஞானவேலன் அவர்கள் எனக்கு ரோட்டரி பற்றிய விழிப்புணர்வை கொடுத்தார்.  

எனக்குள் இருந்த சமுதாயதிற்கு ஏதேனும் செய்யவேண்டும் என்ற ஆவலை நான் 'ரோட்டரி' மூலம் செய்துகொண்டிருக்கிறேன்.  எங்கள் சங்கமும், எங்கள் மாவட்டமும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது.  ஒவ்வொரு மனிதனும் நம் சூழல் சார்ந்த சமுதாயதிற்கு எதாவது செய்யவேண்டும் என்றால் அவர்கள் தங்களை 'ரோட்டரி' என்னும் இந்த மாபெரும் இயக்கம் அவர்களை வரவேற்க காத்திருக்கிறது.

அதேபோல் சமுதாயத்திற்கு எதாவது செய்யவேண்டும் என்பது மட்டுமல்ல ஆயிரகணக்கான நண்பர்கள் கூட்டம் உங்களை 'ரோட்டரி'-க்கு வரவேற்க காத்திருகிறது.  'ரோட்டரி'யில் உறுப்பினர் என்பதே பெருமிதத்திற்குரிய விஷயம் என்பது நம் எல்லோருக்கும் பெருமையே.


இறுதியாக பொங்கல் விழா குழு சார்பாக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.  "ரோட்டரியை பற்று, வாழ்க்கையை மாற்று' என்ற  எங்களது  கடந்த வருட தாரக மந்திரத்தோடு, "ரோட்டரியை பற்று, வாழ்க்கையில் ஒளியேற்று' என்ற இந்த வருடத்தின் வரிகளையும் நினைவுபடுத்தி விடைபெறுகிறேன்.






No comments:

Post a Comment